தேர்தலுக்கு முன்னால் வீடியோ வெளியிட்ட வெற்றிவேல்! ஓட்டுகளை தினகரன் கைப்பற்ற இதுதான் காரணமா?

பிறப்பு : - இறப்பு :

தேர்தலுக்கு முன்னால் வீடியோ வெளியிட்ட வெற்றிவேல்.! ஓட்டுகளை தினகரன் கைப்பற்ற இதுதான் காரணமா.!!

தினகரன் கடந்த முறை ஆர்.கே நகர் தேர்தலில் போட்யிட்ட போது ஆர்.கே நகரில் 50 ஆயிரம் பேருக்கு வீடுகள் கட்டி தரப்படும் என உறுதியளித்திருந்தார்.

இதனையடுத்து இந்த முற இடைதேர்தலிலும் மக்கள் மத்தியில் இதனையே பிரதானமாக வைத்தி தினகரன் பிரச்சாரம் செய்து வந்தார்.

ஆளும் கட்சி பணம் தந்தால் வாங்கிக் கொள்ளுங்கள் ஆனால் ஓட்டை எனக்கு போடுங்கள் என்று சொல்லி மக்களின் கவனத்தை ஈர்த்தார் தினகரன்.

இதனால் எடப்பாடி மற்றும் ஒபிஎஸ் தினகரனை தாக்கி ஜெயலலிதாவின் மரணத்திற்கு யார் காரணம் என பிராச்சாரம் செய்தனர்.

இதனால் திடீரென தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல், வாக்குப்பதிவிற்கு முந்தைய தினம் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் பழச்சாறு குடித்த வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.

ஜெயலலிதாவின் வீடியோவானது ஆர்.கே நகர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது.

வீடியோவை வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் கூறியும் வீடியோ மக்களை சென்றடைந்து விட்டது தான் உண்மை.

இதன் பிரதிபலிப்பாகவே தினகரன் அதிக வாக்குகளை பெற்றுள்ளார் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit