தமிழகத்தில் ஆட்சி கலையப்போகிறது: டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி!

பிறப்பு : - இறப்பு :

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், சுயேட்சை வேட்பாளரான டிடிவி தினகரன் முன்னிலையில் இருக்கிறார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்து வரும் தினகரன், தமிழக மக்கள் எண்ணத்தை ஆர்கே நகர் தேர்தல் வெளிப்படுத்தியுள்ளது.

தேர்தலுக்கு பாடுபட்ட ஒன்றரை கோடி தொண்டர்கள், மக்களுக்கு நன்றி, நான் எந்த இடத்திற்கு சென்றாலும் குக்கர் சின்னம் வெற்றி பெறும் என மக்கள் வாழ்த்தினார்கள்.

மக்கள் விரும்புவது ஆட்சி மாற்றத்தைத்தான், அதை தியாகத்தலைவி சின்னம்மா சசிகலா தலைமையில் எங்கள் கட்சி வழங்கும் என நம்புகிறார்கள். சின்னம் மற்றும் கட்சி யார் பக்கம் இருப்பது என்பது முக்கியமில்லை.

தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது தான் முக்கியம். இன்று தனது பிறந்தநாளில் எம்ஜிஆர் அவர்கள் எங்களுக்கு ஆசிர்வாதம் வழங்கியிருக்கிறார்கள் என கூறியுள்ளார்.

இன்னும் 3 மாதத்தில் ஆட்சி கலையப்போகிறது என தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit