தமிழ் கலாசாரத்தால் கவரப்பட்ட சிங்கப்பூர் காதல் ஜோடி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

sng

சிங்கப்பூரை சேர்ந்த காதல் ஜோடியினர் தமிழ் கலாசாரத்தால் கவரப்பட்டு தமிழ் முறைப்படி நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

சிங்கப்பூரில் உள்ள குவின்ஸ்சாங் என்ற பகுதியைச் சேர்ந்த இமானுவேல் பென்சா(வயது 27), ஷாலினி(27), இருவரும் ஒன்றாக பணியாற்றியபோது பழக்கம் ஏற்பட்டு கடந்த மூன்றரை வருடங்களாக அவர்கள் காதலித்து வருகின்றனர்.

இவர்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள கார்னர் ஸ்டோன் குழந்தைகள் இல்லத்தில் மாணவ, மாணவிகளுக்கு உடற்கல்வி கற்றுத் தந்தனர்.

தமிழ் கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட அவர்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் தமிழக கலாசாரப்படி தங்களின் திருமண நிச்சயதார்த்தத்தை நடத்திட முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து பெண் தரப்பில் ஒருவரை தாய்மாமனாகவும், மாப்பிள்ளை தரப்பில் ஒருவரை தாய்மாமனாகவும் இருக்கும் படி செய்து, நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.

தமிழக கலாசாரப்படி எப்படி நிச்சயதார்த்த நிகழ்வு நடக்குமோ அதன்படி அனைத்து சடங்குகளும் நடைபெற்றதை தொடர்ந்து, இருவருக்கும் 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடத்திட முடிவு செய்யப்பட்டது. பின்னர் இருவரும் மாலை மாற்றி கொண்டனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit