கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்து கட்டிய மனைவி: நாடகமாடியது அம்பலம்

பிறப்பு : - இறப்பு :

கணவரை கொலை செய்ய கள்ளக்காதலனுக்கு திட்டம் போட்டு கொடுத்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் கடப்பாவில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. சிவா என்பவருக்கும் அருணா என்ற பெண்ணுக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு முன்னரே சாய் சுபாஷ் என்ற இளைஞருடன் தொடர்பில் இருந்த அருணா திருமணத்துக்கு பின்னரும் அதை தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் அருணாவின் கள்ளக்காதல் விவகாரம் சிவாவுக்கு தெரியவந்த நிலையில் மனைவியை கண்டித்துள்ளார்.

இதையடுத்து கணவரை சுபாஷுடன் சேர்ந்து கொல்ல முடிவெடுத்த அருணா அதற்கான திட்டத்தை சொல்லி கொடுத்துள்ளார்.

அதன்படி சிவாவை சுபாஷ் மது அருந்த அழைத்து சென்றுள்ளார். சுபாஷுடன் அவரின் நண்பர்களான வெங்கட்ரமணா மற்றும் ஸ்ரீனுவும் உடன் சென்றுள்ளனர்.

மது அருந்திய பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் இருந்த சிவாவை மூவரும் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

பின்னர் சடலத்தை அங்குள்ள காட்டு பகுதியில் வீசியுள்ளனர். இதனிடையில் சிவாவை காணவில்லை என அவர் குடும்பத்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அவர்களுடன் ஒன்றும் தெரியாதது போல அருணாவும் புகார் அளித்துள்ளார். இதையடுத்து பொலிசார் விசாரணை நடத்தும் போது அருணா மீது சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தியதில் உண்மைகள் அனைத்தையும் ஒத்து கொண்டார்.

இதையடுத்து அருணா மற்றும் சுபாஷை பொலிசார் கைது செய்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit