ஆர்.கே.நகரில் வாகை சூடப்போவது யார்? வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஆர்.கே நகரில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இத்தேர்தல் ஆரம்பித்ததில் இருந்து ஏகப்பட்ட சர்ச்சைகள், புகார்கள், கொந்தளிப்புகள் நிலவின, அதுமட்டுமின்றி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது, பணம் வரலாறு காணாத அளவுக்கு விளையாடியது.

இப்படி அந்த தொகுதியில் பணம் விளையாடுவதற்கு முக்கிய காரணமாக விளங்குபவர் தினகரன் என்று கூறப்படுகிறது. ஏனெனின் ஜெயலலிதா இறந்த பின்பு ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டணி பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு ஒன்று சேர்ந்தது.

அதன் விளைவாக ஒன்றாக இருந்த தினகரன் கட்சியிலிருந்து கழற்றிவிடப்பட்டார், ஜெயிலில் இருக்கும் சசிகலா பற்றியும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பல புகார்களை தெரிவித்தன.

இதனால் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் மக்களின் மனதில் ஒரு நிலையான இடத்தை பெற்றுவிடலாம் என்பது தினகரனின் கனவு, அதுவே தற்போது வந்த தினகரன் வெற்றி பெற்றால் அவ்வளவு தான் இவ்வளவு ஆண்டுகள் அரசியல் செய்து வந்ததற்கு ஆதாயம் இல்லாமல் போய்விடும் என்பதால், இரு அணியினரும் மாறி மாறி பணங்களை மக்களுக்கு வாரி வழங்கினர்.

இப்படி பல பிரச்சனைகளுக்கிடையே ஆர்.கே.நகரில் தேர்தல் நடைபெற்று முடிந்தது. மொத்தமுள்ள 2 லட்சத்து 28,234 வாக்காளர்களில் 33,994 ஆண்கள், 92,867 பெண்கள், இதர பாலினத்தவர் 24 பேர் என 1 லட்சத்து 76,885 பேர் வாக்களித்துள்ளனர். இதன்படி, இறுதியாக 77.5 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவி பாட் இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை, காவல்துறை ஆணையர் ஆய்வு செய்தார். வாக்கு எண்ணிக்கைக்கு 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன.

ஒரு சுற்றுக்கு 14 வாக்குச்சாவடிகளின் பெட்டிகள் எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதன்படி பார்த்தால் 18 முழு சுற்றுக்கள், ஒரு அரை சுற்று என மொத்தம் 19 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கார்த்திக்கேயன் கூறியுள்ளார்.

காலை முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். சற்று நேரத்திலேயே அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற நிலவரம் தெரியவரும். பிற்பகலில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து, முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*