பொலிசாரின் கன்னத்தில் பளார் கொடுத்த கல்லூரி மாணவர்: இவர் யார் என்று ஆத்திரம்?

பிறப்பு : - இறப்பு :

தமிழகத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட பொலிசாரை கல்லூரி மாணவர் ஒருவர் அடித்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது.

சென்னை ஜாபர்கான்பேட்டை பாலத்திற்கு அருகே இருக்கும் பாரிநகர் பகுதியில் முதல் நிலை காவலர் மகேஷ்வரன் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அந்த வழியே வந்த மூன்று கல்லூரி மாணவர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதைக் கண்ட மகேஷ்வரன் அவர்களின் வாகனத்தை நிறுத்த முற்பட்டுள்ளார், ஆனால் மாணவர்கள் நிறுத்தாமல் தொடர்ந்து சென்றதால், அவர்கள் கிழே விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர் ஒருவர் அவரிடம் ஆபாச வார்த்தைகள் பேசியதோடு, கன்னத்தில் பளார் என்று அடி கொடுத்தார், இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதையடுத்து காவல்பணியில் இருந்த பொலிசாரை பொதுவெளியில் தாக்கி தரக்குறைவாக பேசி பணி செய்யவிடாமல் தடுத்ததாக குறித்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit