போஷாக்குக் குறைபாட்டால் 25 சதவீதமான ரோஹிங்கியா சிறுவர்கள் பாதிப்பு

பிறப்பு : - இறப்பு :

பங்களாதேஷில் தஞ்சம் கோரியுள்ள ரோஹிங்கியாச் சிறுவர்களில் 5 வயதுக்குட்பட்ட 25 சதவீதமானோர் போஷாக்குக் குறைபாட்டால் ஆபத்தான நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக, யுனிசெப் நிறுவனம் எச்சரித்துள்ளது.

கடந்த நொவம்பர் 22ஆம் திகதி 27ஆம் திகதிவரை 3 சுகாதார நிறுவனங்கள் ஆய்வை நடத்தியபோதே, இது தொடர்பாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், 60 சதவீதமான சிறுவர்கள் சுவாச நோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், 40 சதவீதமான சிறுவர்கள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், யுனிசெப் நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

மியன்மாரின் ராஹினி மாநிலத்தில் கடந்த ஓகஸ்ட் மாத இறுதியில் ஆரம்பித்த வன்முறை காரணமாக, அயல் நாடான பங்களாதேஷில் ரோஹிங்கியா முஸ்லிம்களில்; சுமார் 6 லட்சத்து 55 ஆயிரம் பேர் தஞ்சம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit