அமெரிக்காவில் வளர்ப்பு நாய்களால் கொல்லப்பட்டாரா இளம்பெண்?

பிறப்பு : - இறப்பு :

அமெரிக்காவில் தனது வளர்ப்பு நாய்களால் பெண் ஒருவர் கொல்லப்பட்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

22 வயதான பெதானி லின் ஸ்டீபன் என்ற இளம்பெண் அமெரிக்காவில் கடந்த வாரம் வியாழக்கிழமை தனது வளர்ப்பு நாய்களோடு நடைப்பயிற்சி சென்றிருக்கிறார். ஆனால், மீண்டும் அவர் வீடு திரும்பாததால் அவரது தந்தை அவசர அழைப்பு அதிகாரிகளை அழைத்திருக்கிறார்.

இந்த நிலையில் உடலில் காயங்களுடன் நினைவிழந்த நிலையில் பெதானி உடலை அதிகாரிகள் கண்டெடுத்தனர். அதற்குப் பிறகு சில நிமிடங்களிலேயே பெதானி இறந்துவிட்டார்.

பெதானியாவின் மரணம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவின. இதனைத் தொடர்ந்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அதிகாரிகள் முடிவெடுத்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறும்போது, ”ஸ்டீபன் மீது தூப்பாக்கி சூடோ, பாலியல் ரீதியலான வன்முறை தாக்குதல் நடைபெற்றதற்காக எந்த அடையாளமும் இல்லை. நாங்கள் பெதானி உடலைக் கண்டபோது அவரது உடலை அவரது வளர்ப்பு நாய்கள் கடித்துக் கொண்டிருந்தன. அதன் பிறகு சில நிமிடங்களில் அவர் இறந்திருக்கக் கூடும். மேலும், பெதானியின் உடலில் அவரது வளர்ப்பு நாய்கள் கடித்ததற்கான அடையாளங்கள் உள்ளன” என்றார்.

எனினும் அதிகாரிகளின் இந்த விளக்கத்தை பெதானியின் நண்பர்கள் மறுத்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit