
தாய்லாந்தில் டிரக் டயர் ஒன்று மோட்டார் சைக்கிளில் வந்த பெண்ணின் மீது மோதியதால், அப்பெண் அந்த இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தாய்லாந்தின் Nakhon Pathom மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் கடந்த 8 ஆம் திகதி காலை உள்ளூர் நேரப்படி 07.20 மணி அளவில் Apinya Sotthong (28) என்ற பெண் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த நெடுஞ்சாலையின் மறுபுறத்தில் டிரக் லாரி ஒன்று வந்து கொண்டிருந்த போது, திடீரென்று அந்த லாரியில் இருந்து டயர் ஒன்று தனியாக உருண்டோடி வந்து, அதன் பின் குதித்து சரியாக Apinya Sotthong தலையில் வந்து மோதியது.
இதனால் அப்பெண் அந்த இடத்திலே நிலை குலைந்த நிலையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து பொலிசார் தெரிவிக்கையில், டிரக்கில் இருந்து வந்த டயர் வேகமாக வந்து பெண்ணின் தலையில் மோதியதால், பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, அதுமட்டுமின்றி பெண்ணின் கழுத்து பகுதி முற்றிலும் உடைந்தால், அவர் சம்பவ இடத்திலே அதாவது நடுரோட்டிலே பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு காரணமான டிரக்கை பற்றி விசாரித்த போது, அந்த டிரக்கின் டிரைவர் அருகில் இருந்த பாலத்தின் அருகே டிரக்கை மட்டும் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டான் என்றும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.