
பெண்களுக்கு கருப்பாக இருக்கும் ஆண்கள் தான் பிடிக்கும் என்றுதான் நாம் கேள்வி இருப்போம். ஆனால் ஆண்களுக்கு சிகப்பாக இருக்கு பெண்கள் மீது மயங்குவதற்கு பல்வேறுபட்ட காரணங்கள் எழுகின்றன. மேட்ரிமோனியல் இணையதளத்தில் ஆண்கள் அழகான மற்றும் சிகப்பாக இருக்கும் பெண்களை மட்டும் தேடுவார்கள் எதற்கு என்பதை பார்ப்போம்.
கருப்பாக இருப்பவர்கள், தங்களை யாரும் கவனிப்பதில்லை என்று நினைக்கிறார்கள். ஒரு குழுவிலோ அல்லது சமூகத்திலோ நம்மை விரும்புவதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் சிகப்பழகு முக்கியம் என்று நினைப்பவர்கல் அதிகம். ஆனால் அது உண்மையாக இருப்பது இல்லை. தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் பெரும்பாலான விளம்பரங்களில் பெண்கள் மற்றும் ஆண்கள் சிகப்பாக இருந்தால் தான் அழகு என்று கூறுவார்கள்.
பெண்கள் கருப்பாக, உயரமான மற்றும் அழகான ஆண்களையே விரும்புகிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த காலத்து இளைஞர்கள் வெளித்தோற்றத்தை வைத்தே மற்றவர்கள் எப்படி பட்டவர்கள் என்பதை மதிப்பிடுகிறார்கள். இதனால் ஆண்கள் தனக்கு வரும் மனைவி அழகாக, சிகப்பாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
சினிமாவில் நடிக்கும் நடிகை நடிகர்கள் சிகப்பாக இருப்பதால் நமக்கு தேர்தெடுக்கும் துணையும் சிகப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. சினிமா நட்சத்திரங்களை மேக் அப் இல்லாமல் ஒருமுறை பாருங்கள். நமது எண்ணத்திலேயே சிகப்பு, கருப்பு பிரச்சனை உள்ளது.நம் எண்ணத்தை மாற்றி, நமக்கு பிடித்தவர்கள் கருப்போ சிகப்போ நமக்கு அழகாக தெரிவார்கள் என்பதே உண்மை.