தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதை நிறுத்துங்கள்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

பிறப்பு : - இறப்பு :

ஆப்கானிஸ்தானுக்கு திடீர் பயணமாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் நேற்று சென்றார். தலைநகர் காபூலில் அந்த நாட்டு அதிபர் அஷ்ரப் கனி, தலைமை செயல் அதிகாரி அப்துல்லா அப்துல்லா ஆகியோரை சந்தித்துப் பேசினார். பின்னர் அமெரிக்க விமானப்படைத் தளம் அமைந்துள்ள பாக்ரம் பகுதிக்குச் சென்றார். அங்கு 15,000 அமெரிக்க வீரர்கள் முகாமிட்டுள்ளனர். அவர்கள் மத்தியில் மைக் பென்ஸ் பேசியதாவது:

தலிபான்களுக்கும், இதர தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தான் அடைக்கலம் அளித்து வருகிறது. இதனால் ஆப்கானிஸ்தானின் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தாவிட்டால் மிகப்பெரிய இழப்புகளைச் சந்திக்க நேரிடும். இதுதொடர்பாக அதிபர் டொனால்டு ட்ரம்ப், பாகிஸ்தானுக்கு ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படுமா என்று மைக் பென்ஸிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், அதிபர் டொனால்டு ட்ரம்ப் முடிவு செய்வார் என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit