சிரியாவில் தொடங்கப்பட்ட சுவிட்சர்லாந்தின் மனிதாபிமான அலுவலகம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சுவிட்சர்லாந்து அரசு சார்பாக சிரியாவில் Humanitarian Office தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒற்றைப் பணியாளருடன் கூடிய அந்த அலுவலகம் சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டுள்ளது, இதன்மூலம் சிரியாவில் மனிதாபிமான அலுவலகம் தொடங்கும் நாடு என்னும் பெருமையை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பின் சுவிஸ் தட்டிச் சென்றுள்ளது.

கடந்த 2012-ஆண்டு தனது சிரிய தூதரகத்தை திரும்ப பெற்ற சுவிஸ், தற்போது அரசியல் கருத்துகளுக்கு அப்பாற்பட்டு முற்றிலும் உதவி நோக்கத்தோடு அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிரியா தலைநகர் Damascus-ல் தொடங்கப்பட்டுள்ள அந்த அலுவலகம் நிச்சயம் சிரியா மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்திடும் என சுவிஸ் அரசு அதிகாரி Manuel Bessler தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஜார்டன், லெபனான், துருக்கி போன்ற நாடுகள் பாதிக்கப்பட்ட போது சுவிஸ் அரசு சார்பாக அலுவலகம் தொடங்கி உதவி செய்துள்ளது.

சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் நடந்து வரும் உள்நாட்டு போரில், 340,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர், பலரும் அகதிகளாக மற்ற நாடுகளில் தஞ்சமடைவது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*