தினசரி 10 மொத்தம் 16000 பெண்களுடன் படுக்கை டெல்லி சாமியார் குதித்து மாண்ட பெண்கள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

டெல்லியில் உள்ள சாமியாரின் ஆஸ்ரமத்தில் 100க்கும் மேற்ட்ட சிறுமிகளை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்வதாக, 40 பெண்குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.

பகவான் கிருஷ்ணரை போல 16000 பேரை திருமணம் செய்ய வேண்டும் என்று கூறி தினசரி 10 பேரை படுக்கைக்கு அழைத்துள்ளார் பலே சாமியார். அந்த சாமியாரின் கொடுமையை தாங்க முடியாமல் பல பெண்கள் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

டெல்லியின் ரோகினி என்ற பகுதியில் உள்ளது ஆத்யத்மிக் விஷ்வ வித்யாலயா என்ற ஆஸ்ரமம். இங்கு சாமியார் விரேந்திர தேவ் திக்‌ஷித் மீது பல பெண்கள் பாலியல் புகார் அளித்தும், போலீஸார் கண்டுகொள்ளவில்லை எனவும், பலர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இங்கிருந்து தப்பி வந்த 32 வயதான ஒரு பெண் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அந்த ஆஸ்ரமத்தில் 100க்கும் அதிக பெண்கள் அடைத்து வைக்கப்பட்டு சாமியார் விரேந்திர தேவ் திக்‌ஷித்தால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர்.

அங்கு இருட்டறையில் அடைத்து வைக்கப்பட்டு, யாரும் யாரிடமும் பேசக்கூடாது என கட்டளைகள் விதிக்கப்படுவதாகவும், பல பெண்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டும் உள்ளதாக தெரிவித்துள்ளார். என்னையும் பல முறை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். இவரின் பேட்டியை தொடர்ந்து அரசு சாரா அமைப்பு அந்த ஆஸ்ரமம் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆஸ்ரமத்தை வீடியோ பதிவுடன் ஆய்வு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் போலீசார் உதவியுடன் டெல்லி பெண்கள் ஆணையம் மற்றும் குழந்தைகள் நலக் குழு வெள்ளிக்கிழமையன்று சோதனையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் கூறுகையில், ஆசிரமத்தில் இருந்து 41 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த ஆசிரமம் ஒரு குகை போல் இருக்கிறது.

இதற்கு திகார் சிறையின் நிலை பரவாயில்லை. இதற்குள்ளே செல்வது என்பது மிகவும் கடினமானது. ஒருவேளை ஒருவர் உள்ளே சென்று விட்டால், திரும்பி வருவது என்பது இயலாத ஒன்று. பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி துன்புறுத்தப்பட்டுள்ளனர். ஆசிரமத்தின் உரிமையாளரான பாபா விரேந்தர் திக்சித் கைது செய்யப்பட வேண்டும் என கூறினார். டெல்லி உயர் நீதிமன்றம் ஆசிரமத்தின் நிறுவனரை ஜனவரி 4ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கூறியுள்ளது. ஆனால் சாமியார் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

அங்கு பெண்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்படவில்லை என்று ஆசிரமம் சார்பில் தெரிவிக்கப்பட்ட பதிலுக்கு, உயர் நீதிமன்றம் அப்படியென்றால் அவர்களைச் சுதந்திரமாக விட வேண்டியதானே.ஏன் அவர்களை அடைத்து வைத்துள்ளீர்கள் என வியாழக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது. தலைமை நீதிபதி கீதா மிட்டல் மற்றும் நீதிபதி சி.ஹரி ஷங்கர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,ஆசிரமத்தின் நிறுவனர் மற்றும் ஆன்மீகத்தின் தலைவர் நேர்மையானவர், உண்மையானவராக இருந்தால் ஏன் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக வில்லை என கேள்வி எழுப்பினர்.

இதனிடையே சாமியார் பாபா விரேந்தர் திக்சித், தன்னை பகவான் கிருஷ்ணர் போல சித்தரித்துக்கொண்டு 16000 பேரை திருமணம் செய்ய முயற்சி செய்ததாகவும், 10 பேரை தினசரியும் படுக்கைக்கு அழைப்பார் என்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியுள்ளனர். சாமியாரின் கொடுமையை தாங்க முடியாமல் பல பெண்கள் குதித்து உயிரிழந்தனர் என்றும் பெண்கள் அச்சத்துடன் கூறியுள்ளனர். சாமியார் ஆசிரமம் பற்றி தோண்ட தோண்ட திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*