தரக்குறைவான விமர்சனங்களில் ஈடுபடும் ராகுல்: பாஜக சாடல்

பிறப்பு : - இறப்பு :

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தரக்குறைவான விமர்சனங்களில் ஈடுபட்டு அதிகாரத்துக்கு வர முயற்சிப்பதாக பாஜக சாடியுள்ளது.

முன்னதாக ராகுல் காந்தி, இன்று (சனிக்கிழமை) தனது ட்விட்டர் பக்கத்தில், “பாஜகவுக்கு என ஒரு சினிமா நிறுவனம் இருந்திருந்தால் அதற்கு ‘லை ஹார்டு’ என்றே பெயர் இருந்திருக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகப் பதிவிட்டுள்ள பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் தன் ட்விட்டர் பக்கத்தில், “ராகுல் காந்தி, நீங்கள் இத்தகைய கீழ்த்தரமான அரசியல் பேச்சில் ஈடுபடும் அளவுக்குத்தான் திறமையுள்ளவரா? அதிகாரத்தை எந்த வழியிலாவது கைப்பற்ற நீங்கள் இத்தகைய தரக்குறைவான விமர்சனங்களில் ஈடுபடுவீர்களா?

நீங்கள் என்ன சொன்னாலும், உங்களின் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வராது.ஏனெனில் மக்களுக்கு ஊழலின் முகம் உங்களுடையது என்று தெரியும்” என்று பதில் அளித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit