சி.வி.கே. சிவஞானத்தின் அறிவிப்பு!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

CVK-Sivagnanam-300-news

உள்ளாட்சி மன்றங்களுக்கான தவிசாளர், உதவித் தவிசாளர் பதவிகளுக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் பிரகடனப்படுத்தப்படவில்லை

உள்ளாட்சி மன்றங்களுக்கான தவிசாளர் மற்றும் உதவித் தவிசாளர் பதவிகளுக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் பிரகடனப்படுத்தப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியால் இன்று முற்பகல் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட வட மாகாண அவைத் தலைவரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் துணை செயலாளருமான சி.வி.கே. சிவஞானம் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவடைந்ததன் பின்னரே இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்தி, அதனூடாக தமது பலத்தை நிலைப்படுத்துவதே தமது நோக்கம் என ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை ஜனநாயக போராளிகள் கட்சி யாழ்ப்பாணத்தில் வெளியிட்டது.

இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், ஜனநாயக போராளிகள் கட்சித் தலைவர் வேந்தன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமையை சிதைக்காமல், எதிர்வரும் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit