திருகோணமலை வெல்கம்விகாரை மக்கள் ஆர்ப்பாட்டம்!

பிறப்பு : - இறப்பு :

திருகோணமலை வெல்கம்விகாரை பகுதியில் உள்ள மக்கள் தமது பகுதியில் அரசினால் அமைத்துக்கொடுக்கப்பட்ட யானை வேலிகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெல்கம்விகாரை பகுதியில் இருந்து நேற்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டப் பேரணியாக கன்னியா பகுதி திண்மக்கழிவுகள் அகற்றும் நிலையத்திற்கு முன்பாக வந்தடைத்த கிராம வாசிகள் கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்ட யானை வேலியிடும் பணிகளை முன்னைய அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக இருந்த ஒருவர் குறித்த குத்தகையினை தனியார் ஒருவரிடம் கொடுத்ததாகவும் அதன் காரணமாக தமக்கு பாதுகாப்பற்றதும் தரமற்றதுமான யானை வேலிகள் மாத்திரமே எஞ்சியுள்ளதாக தெரிவித்த கிராம வாசிகள் அவற்றை உடனடியாக அகற்றி பாதுகாப்பான யானை வேலிகளை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit