சென்னை விமான நிலையத்தில் கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு!

பிறப்பு : - இறப்பு :

கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த 2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 11 பேரையும் விடுவித்து கடந்த 21-ம் திகதி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.

இத்தீர்ப்பை திமுக தொண்டர்கள் வெடி வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.

இந்நிலையில் இன்று டெல்லியிலிருந்து தமிழகம் திரும்பிய கனிமொழி, ஆ.ராசா அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் திமுக தொண்டர்கள் தாரை தப்பட்டை முழங்க பூச்சென்று கொடுத்து பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

இருவரது கைகளையும் கோர்த்து தன்னுடன் நிறுத்தி புகைப்படம் எடுக்க ஸ்டாலின் நின்ற போது கனிமொழி கண்கலங்கினார், தொடர்ந்து அண்ணனை ஆரத்தழுவி நன்றி தெரிவித்தார்.

இதனையடுத்து வழி நெடுக வரவேற்புடன் கோபாலபுரம் அழைத்துச்செல்லப்பட்டனர், அங்கு கருணாநிதியிடம் கனிமொழியும், ஆ.ராசாவும் வாழ்த்து பெறுகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit