2 மனைவிகளையும் காரில் வைத்து உயிரோடு எரித்து கொன்ற கொடூர கணவன்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

kill

ராஜஸ்தானில் தீபா ராம் என்பவருக்கு மாலு தேவி, தரியா தேவி என்ற இரண்டு மனைவிகள் இருந்தனர்.

இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனை சமாளிக்க முடியாமல் தீபா ராம் திணறி வந்தார்.

இந்த நிலையில், தீபா ராம் இருவரையும் நகைகள் வாங்கி தருகிறேன் என்று கூறி காரில் அழைத்து சென்றார். உடன் 1 வயது குழந்தையும் இருந்தது. அப்போது பாதி வழியில் இருவருக்கும் இடையில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த தீபாராம் காரில் இருந்து இறங்கினார். பின்னர் 2 மனைவிகள் மற்றும் குழந்தையை காரோடு தீ வைத்து எரித்து கொன்றார்.

இதனை நேரில் பார்த்த பெண் ஒருவர் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் தீபாராமை கைது செய்தனர் அவரிடம் நடத்திய விசாரணையில் குடும்ப தகராறில் இருவரையும் எரித்து கொன்றதாக கூறி உள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit