1500% ஏறிய பிட்காயின் மதிப்பு திடீரென குறைந்ததால் அதிர்ச்சி!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்தியாவில் பிட்காயின் வர்த்தகம் சட்டபூர்வமாக அனுமதிக்கப்படவில்லை என்றாலும் பிட்காயினில் முதலீடு செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேதான் வருகிறது. 2017ஆம் ஆண்டில் மட்டும் பிட்காயினின் மதிப்பு 1500% உயர்ந்துள்ளதே இந்த வர்த்தகம் அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது

ஆனால் அதே நேரத்தில் பிட்காயினில் செய்யப்படும் முதலீடுக்கு பாதுகாப்பில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் ஒரு பிட்காயினின் மதிப்பு 8,76,226 ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிட்காயின் மதிப்பு நேற்று ஒரே நாளில் மட்டும் 15 புள்ளிகள் குறைந்துள்ளது. இதனால் பிட்காயினில் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வர்த்தகத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி இருப்பதாலும்,

தென் கொரியாவின் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் ஈடுபட்டு இருந்த யூபிட் எக்ஸ்சேஞ்ச், திவாலாகி இருப்பதும் இந்த திடீர் இறக்கத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில்

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்ததால், தன்னை சரி செய்து கொள்வதற்கு இதுபோன்று இறங்குமுகம் அனைத்து வர்த்தகத்திலும் சகஜம் என்றும் கூறப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*