நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய 5-ஆம் வகுப்பு மாணவன்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்தியாவில் தண்டவாளத்தின் விரிசலைக் கண்ட பள்ளி சிறுவன், உடனடியாக தனது உடையை கழற்றி இரயிலை நிறுத்தியதால் நூற்றுக்கணக்கான பயணிகள் உயிர்பிழைத்தனர்.

பீகாரின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் மங்கல்பூரை சேர்ந்த மாணவன் பீம் யாதவ்(12). அங்கிருக்கு அரசுப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வரும், இவர் நேற்று தனது பழதோட்டத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது கோரக்பூர்-நர்கட்டியாகாஞ்ச் இடையே உள்ள இரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்றபோது இரயில்வே தண்டவாளம் உடைந்து இருப்பதை பார்த்துள்ளான்.

இதையடுத்து அதே தண்டவாளத்தில் பயணிகள் இரயில் ஒன்று வருவதை பார்த்து சிறுவன் இரயிலை நோக்கி கையை காட்டி கத்தியுள்ளார்.

அதன் பின் உடனடியாக தான் அணிந்திருந்தசிகப்பு கலர் டி-சர்ட்டை கழட்டி கொடிபோன்று சுழற்றி சுழற்றி காட்டி இரயிலை நிறுத்துமாறு கத்தி உள்ளான்.

முதலில் புரியாமல் இருந்த இரயில் ஓட்டுநர், ஏதோ பிரச்சனை அதன் காரணமாகத்தான் சிறுவன் ஓடி வருகிறான் என்று எண்ணி, உடனடியாக இரயிலை நிறுத்தியுள்ளார்.

ஒட்டுநர் இறங்கி வந்து தண்டவாளத்தை பார்த்த போது தண்டவாளம் உடைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அந்த சிறுவனை அவர் பாராட்டினார் உடனடியாக இது குறித்து அவர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

சிறுவனின் அறிவிப்பூர்வமான நடவடிக்கையில் ஏற்பட இருந்த மிகப்பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இதனால் நூற்றுகணக்கான பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*