அடுத்த வாரத்தில் இரு கட்சி தாவல்கள்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

625-147-560-350-160-300-053-800-264-160-90-11

எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றத்தில் இரண்டு பேர் அணி மாறவுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தில் பிரதியமைச்சராக பதவி வகித்து வரும் ஒருவர் கூட்டு எதிர்க்கட்சிக்கு தாவ உள்ளதுடன் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஒருவர் ஆளும் கட்சிக்கு தாவ உள்ளதாக பேசப்படுகிறது.

கூட்டு எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்திற்கு மாறவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியை வகித்தவர்.

தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வழங்கும் இணக்கப்பாட்டுடன் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆளும் கட்சிக்கு மாறவுள்ளார்.

கண்டி மாவட்டத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரே இவ்வாறு கட்சி அரசாங்கத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய போவதாகவும் இது குறித்து பிரதமருடன் பேசப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கெஹெலிய ரம்புக்வெல்ல தற்போது கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகித்து வருகிறார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit