வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ள 03 இலட்சம் பேருக்கு அடையாள அட்டை இல்லை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வாக்காளர் இடாப்பில் பெயர் பதியப்பட்டுள்ள போதிலும் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் சுமார் 03 இலட்சம் வரையில் இருப்பதாக ஆட்பதிவுத் திணைக்களம் கூறியுள்ளது.

அடையாள அடடைக்காக விண்ணப்பிக்கும் போது பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை சம்ர்பிக்கமையின் காரணமாக அவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானா குணதிலக கூறினார்.

இதன் காரணமாக பிறப்புச் சான்றிதழ் இன்றி அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளும் விஷேட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதற்காக விஷேட படிவங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், உரியவரின் தனிப்பட்ட தகவல்களுக்கு மேலதிகமாக அடையாள அட்டையுடைய மூன்று உறவினர்கள் மற்றும் உரியவர் வசிக்கும் பிரதேசத்தில் அடையாள அட்டை இருக்கின்ற மூன்று நபர்களின் தகவல்கள் ஆகியன வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக சத்தியக் கடதாசி ஒன்று சமர்பிக்கப்பட வேண்டும் என்றும் வியானா குணதிலக கூறினார்.

அத்துடன் இந்த திட்டத்திற்காக ஆட்பதிவுத் திணைக்களத்தில் விஷேட பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*