லுங்கி நடனம் ஆடிய பி.வி.சிந்து

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

sinthu

Chennai Smashers இறகுபந்து அணி வீரர்களுக்கான சீருடை அறிமுக விழாவில், இறகுபந்து வீராங்கணை பி.வி.சிந்து லுங்கி டான்ஸ் பாடலுக்கு நடனம் ஆடி அசத்தினார்.

Premiere Badminton League-யின் 3வது தொடர், நாளை முதல் ஜனவரி 14ஆம் திகதி வரை பல நகரங்களில் நடைபெற உள்ளது. இத்தொடரில் பங்குபெறும் ‘Smashers’ அணியின் சீருடை அறிமுக விழா, சென்னையில் உள்ள தனியார் ஒட்டலில் நடைபெற்றது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகர், ’Chennai Smashers’ அணியின் உரிமையாளர் ஆவார். இவருடன் அறிமுக விழாவில், பிரபல இறகுபந்து வீராங்கணை பி.வி.சிந்து கலந்து கொண்டார்.

sin

sinthu

இதனைத் தொடர்ந்து பி.வி.சிந்து, ’லுங்கி டான்ஸ்’ இந்தி பாடலுக்கு விஜய பிரபாகருடன் சேர்ந்து நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது.

பின்னர் இது குறித்து பி.வி.சிந்து கூறுகையில், ‘எனது ஆட்டமுறை சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. எனக்கு சென்னை அணியை மிகவும் பிடிக்கும். இந்த ஆண்டு போட்டிகளுக்காக சிறப்பான முறையில் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

கடந்த ஆண்டினைப் போல, இந்த ஆண்டும் கிண்ணத்தை வெல்வோம்’ என்று தெரிவித்துள்ளார். Chennai Smashers அணி, 2வது சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit