இங்கிலாந்து மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

பிறப்பு : - இறப்பு :

காற்றழுத்த தாழ்வுகள் மற்றும் கடுமையான மழைப்பொழிவு காரணமாக வரும் ஞாயிற்றுக்கிழமை( 24 ஆம் திகதி) போக்குவரத்து பாதிப்புகள் இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் அதிகம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் இங்கிலாந்து மக்கள் விடுமுறை கால பயணங்களை துரிதப்படுத்தி உள்ளனர்.

இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம், அந்நாட்டு வாகன ஓட்டிகளுக்கு சாலை பயணம் குறித்த எச்சரிக்கை விடுத்துள்ளது.

சூறைக்காற்றுடன், கனமழை பெய்ய இருப்பதால் சாலை பயணம் மிக கடுமையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக் கிழமை முதல் இங்கிலாந்தின் வடமேற்கு பகுதிகளில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை மையம் அந்த பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் (குறைந்த அபாய எச்சரிக்கை) விடுத்துள்ளது.

கிறிஸ்துமஸ் விடுமுறையோடு வார இறுதி நாட்களும் சேர்ந்து கொண்டதால் அதிக அளவிலான வாகன ஓட்டிகள் சாலையில் குவிய உள்ளனர். மதிய உணவுக்கு பின்னர் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவிலில் இருக்கும் என போக்குவரத்து வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்ரிக்ஸ் (Inrix) நிறுவனத்தின் தலைமை பொருளாதார வல்லுநர் கிரஹாம் குக் இது குறித்து பேசுகையில், வெள்ளிக்கிழமை மதியத்தில் இருந்து வாகனங்கள் சாலையில் அணி வகுத்து நிற்கும்.

கிறிஸ்துமஸ்க்கு முந்தைய வேலை தினம் என்பதால் வழக்கமான பயணிகளுடன் விடுமுறை தின பயணம் மேற்கொள்பவர்கள் என சுமார் 13 லட்சம் வாகன ஓட்டிகளால் இன்று சாலைகளில் நெருக்கடி ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் மிக மோசமான நாளாக இது அமையும்.

பெரும்பான்மையான நேரங்களில் மிகவும் நெருக்கடியுடன், சராசரி வேகத்திற்கும் குறைவான வேகத்தில் மக்கள் சாலைகளில் ஊர்ந்தபடி செல்வர்.

இதில் இருந்தே போக்குவரத்து நெரிசலின் தன்மையை புரிந்து கொள்ளலாம். மிக நீண்ட நேர பயணமாக இது அமையும்” என்றார்.

முக்கிய சாலைகள் அனைத்திலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.

எதையும் தவிர்க்க முடியாது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் M25 சாலை மிக அதிக நெரிசலுடன் காணப்படும். இதேபோல் மெர்சேசைடு மற்றும் ஸ்டாஃபோர்டுஷைருக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள M1, M4 மற்றும் M6 சாலைகள் அதிக நெருக்கடியுடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.

முடியுமானால் வாகன ஓட்டிகள் இன்றைய தினம் நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்கலாம் என அறிவுறுத்தி உள்ளது.

டிசம்பர் 15 முதல் கிறிஸ்துமஸ் தினம் வரை சுமார் 11.5millioவாகன ஓட்டிகள் சாலையில் பயணிப்பர் என இந்நிறுவனம் கணக்கிட்டுள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் தினம் முதல் புத்தாண்டு தினம் வரையிலான காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 1.75 கோடியாக அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வருவதால் வெளிநாட்டினர் 45 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இங்கிலாந்தை விட்டு தங்கள் நாட்டிற்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர். இதனால் சர்வதேச ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் உச்ச கட்ட பரபரப்பில் இயங்கி கொண்டிருக்கின்றன.

இங்கிலாந்தின் மிகவும் பரபரப்பான விமான நிலையமான ஹீத்ரோ வழியாக இன்று மட்டும் 1.30 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொள்வர் என கணக்கிடப்பட்டுள்ளது.

விமானம், ரயில், கப்பல் எதுவாக இருந்தலும் பயணிகள் பயண நேரத்திற்கு முன்னதாக செல்லும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit