
காதலிக்க மறுக்கும் பெண்களை வீட்டிற்குள் புகுந்து கொடூரமாக கொலை செய்வது, பள்ளி, கல்லூரிக்குள் சென்று அடித்து கொலை செய்வது என்று பல சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துள்ளது.
விழுப்புரம் நவீனா, சென்னை சூளைமேடு பொறியாளர் சுவாதி, கரூர் பொறியியல் மாணவி சோனாலி, தூத்துக்குடி ஆசிரியை பிரான்சினா, விருத்தாசலம் பூதாமூர் செவிலியர் புஷ்பலதா, கோவை தன்யா, சென்னை ஆதம்பாக்கம் இந்துஜா என்று தொடர்ந்து காதலிக்க மறுத்த பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இது போன்று காதலிக்க மறுத்த காரணத்தால் கொடூரமாக படுகொலை செய்துள்ளனர். இவற்றை தான் நாடக காதல் என்று கூறப்படுகிறது.
தற்போது தெலுங்கானாவிலும் நாடக காதலால் பொதுமக்கள் முன்னிலையில் ஒரு பெண்ணை தீயிட்டு கொளுத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் வேலை பார்த்து வந்த சந்தியா ராணி என்ற பெண்ணை, ஒருவர் அடிக்கடி காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்துள்ளார்.
ஆனால், அவனது காதலை ஏற்க மறுத்த சந்தியா ராணி, தன்னுடைய வீட்டிற்கும் தெரியப்படுத்தாமல் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மண்ணெண்ணை கேனுடன் வந்த அந்த நபர், பொதுமக்கள் முன்னிலையில் காதலிக்க மறுத்த சந்தியா ராணி மேல் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடிவிட்டான்.
சுற்றியிருந்தவர்கள் தீயை அணைத்து காந்தி மருத்துமனையில் சேர்த்துள்ளனர். தற்போது 60% தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சந்தியா ராணி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை, தப்பியோடிய கார்த்திக் என்ற நபரை கைது செய்துள்ளனர்.