நேருக்கு நேர் மோதிக் கொண்ட இரயில்கள்: 6 பேர் ஆபத்தான நிலையில் அனுமதி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

6

ஆஸ்திரியாவில் இரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பயணிகள் பலர் காயமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரியாவின் தலைநகரான வினா பகுதியில் இருக்கும் Kritzendorf இரயில் நிலையத்திற்கு அருகில் இரண்டு இரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும், இதில் 6 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து தகவல்கள் தெரிவிக்கையில், இந்த விபத்தில் காரணமாக பயணிகள் சிலருக்கு கை பலமாக அடிபட்டுள்ளதாகவும், இரயில்களில் இருக்கும் பயணிகள் சிலர் இந்த விபத்தில் காரணாமாக இரயிலின் உள்ளே சிக்கிய நிலையில் அழது கொண்டே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை அறிந்து விரைந்த 30 ஆம்புலன்ஸ், இரண்டு ஹெலிகாப்டர் மற்றும் 10-க்கும் மேற்பட்ட பொலிசார் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இது குறித்து மீட்பு படை அதிகாரி ஒருவர் கூறுகையில், விபத்தில் சிக்கியிருந்தவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டுவிட்டதாகவும், இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit