இங்கிலாந்தில் தொலைந்த முன்னாள் தொலைக்காட்சி நிர்வாகி: சுவிஸில் கிடைத்த வினோதம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு மாகாணத்தில் காணாமல் போன நபர் ஒருவர் இரண்டு மாதங்கள் கழித்து சுவிஸ் நாட்டில் கிடைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸ் நாட்டின் UEFA நிறுவனத்தின் அதிகாரியாக பணியாற்றி வந்த 51 வயது நபரான Bernard Ross, கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.

பின்னர் எதிர்காலம் குறித்த கவலையினால் ஏற்பட்ட உடல் நல குறைவினால் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இங்கிலாந்தில் திடீரென மாயமான அந்த நபர் குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்தது.

அவரது குடும்பத்தாரும், நண்பர்களும் தொடர்ந்து தேடி வந்த நிலையில் அந்த நபர் பணியாற்றிய பழைய அலுவலகத்தின் அருகே உள்ள CCTV கமெராக்களில் அவர் டிசம்பர் 8 ஆம் திகதி வந்து சென்றது பதிவாகியுள்ளது.

அதன்பின் அந்த நபரின் மனைவி Jacinta Ross உதவியுடன் அப்பகுதியில் உள்ள ஹொட்டல்கள், விடுதிகள் உள்ளிட்டவற்றில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அப்போது தானாக வந்த அந்த நபர், அதிகாரிகளிடம் சரணடைந்துள்ளதாக Vaud பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்த அவரது மனைவி கூறுகையில், அவர் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளதாகவும், அதனால் ஏற்பட்ட குழப்பத்தின் விளைவாகத்தான் இப்படி நடந்து கொண்டுள்ளார் என்றும் கூறியுள்ளார்.

அந்த நபருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்த்க்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*