அழகி போட்டியில் கலந்து கொண்ட சவுதி பெண்ணின் கண்ணீர் விளக்கம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

625-500-560-350-160-300-053-800-748-160-70-6

அரபு நாடுகளை சேர்ந்தவர்கள் பங்குபெறும் அழகி போட்டியில் சவுதி பெண் பங்கேற்ற நிலையில் இணையத்தில் எழுந்த கடும் விமர்சனங்கள் காரணமாக போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

இந்த அழகி போட்டியில் சவுதி அரேபியா, அல்கேரியா, பெகரின், ஐக்கிய அரபு நாடுகள் போன்ற நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் சவுதியை சேர்ந்த மலக் யூசப் (24) என்ற பெண்ணும் கலந்து கொள்ள விண்ணப்பித்திருந்தார்.

இந்நிலையில், அழகி போட்டியில் மலக் கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இணையத்தில் பலரும் விமர்சித்து வந்தார்கள்.

இஸ்லாமியராக பிறந்த பெண் அழகி போட்டியில் கலந்து கொள்வது நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை மீறும் செயல் என பலர் கூறினார்கள்.

இது நாட்டை தவறாக பிரதிநிதித்துவப்படுத்துவது போல ஆகிவிடும் எனவும் விமர்சித்துள்ளனர்.

இது போல பல்வேறு கடும் விமர்சனங்கள் எழுந்ததால் மன உளைச்சல் அடைந்த மலக் அழகி போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

இது குறித்து வேதனையுடன் ஒரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அதில், சவுதி மக்கள் என்னை பற்றி முழுவதுமாக தெரிந்திருந்தால் என்னை விமர்சித்திருக்க மாட்டார்கள்.

என்னை நிரூபிக்க விடாமல் வார்த்தைகளால் வேதனைபடுத்திவிட்டீர்கள், என் வெளி அழகை வைத்து மதிப்பீட்டீர்களே தவிர என் மனதை வைத்து யாரும் என்னை மதிப்பிடவில்லை.

என்னுடைய சவுதி மக்கள் என்னை ஆதரிப்பார்கள் என நினைத்தேன், ஆனால் அப்படி நடக்கவில்லை என கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit