அமைதி பேச்சுவார்த்தைக்கு உடன்பாடு; பாக். ராணுவ தளபதி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்தியாவுடன் பாகிஸ்தான் அரசு அமைதி பேச்சுவார்த்தை நடத்தினால், அதற்கு ராணுவம் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டத்தில் ராணுவ தளபதி குவாமர் கூறியுள்ளார்.

கடந்த ஆறு ஆண்டுகளில் முதன்முறையாக செவ்வாயன்று நடந்த பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டத்தில் அந்நாட்டு ராணுவ தலைமை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ராணுவ தளபதி குவாமர் ஜாவத் பாஜ்வா, இந்தியா, ஆப்கானிஸ்தான் உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தைான் ராணுவம் நட்புடன் இருக்க விரும்புவதாக தெரிவித்தார்.

குறிப்பாக இந்தியாவுடன் போர் நடத்தாமல், அமைதி பேச்சுவார்த்தைக்கு அரசு முயற்சித்தால், அதற்கு ஆதரவளிக்க ராணுவம் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.,

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*