இதனால் தான் தோற்றோம்: டி20 தோல்விக்கு பின்னர் கலங்கிய தரங்கா

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

துடுப்பாட்டத்தில் மோசமாக செயல்பட்டதே தங்கள் தோல்விக்கு காரணம் என இலங்கை அணியின் தொடக்க வீரர் உபுல் தரங்கா கூறியுள்ளார்.

இலங்கை – இந்தியா இடையில் நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் இந்தியா 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

20 ஓவர்கள் முழுமையாக தாக்குபிடிக்காத இலங்கை 16 ஓவர்களிலேயே 87 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இந்த போட்டியில் 23 ஓட்டங்கள் எடுத்த இலங்கை வீரர் தரங்கா தோல்விக்கு பின்னர் கூறுகையில், எங்களின் துடுப்பாட்டம் தான் தோல்விக்கு காரணம்.

பந்துவீச்சில் ஆரம்பத்தில் நன்றாக நாங்கள் செயல்பட்டாலும் பின்னர் அதிகளவு பவுண்டரிகளை எதிரணிக்கு விட்டு கொடுத்ததால் ஆட்டம் அவர்கள் கைக்கு போய்விட்டது.

எங்கள் அணியின் துடுப்பாட்டம் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. குறைந்த பட்சம் 20 ஓவர்கள் முழுவதுமாவது பேட்டிங் செய்திருக்க வேண்டும்.

தோற்பது சகஜம் என்றாலும், எதிரணியின் இலக்கை நெருங்கியிருக்க வேண்டும், இதையெல்லாம் நாங்கள் செய்யவில்லை.

ஆனாலும், இந்த தொடரில் சிறந்த வீரர்களுடன் தான் இலங்கை களமிறங்கியுள்ளது என கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*