அதிவேக அரைச் சதம், சதம் : வில்லியெர்ஸ் புதிய உலக சாதனை!

பிறப்பு : - இறப்பு :

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் தென் ஆபிரிக்க அணியின் கேப்டன் டிவிலியர்ஸ் 31 பந்துகளில் அதிவேக சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இன்று ஜோஹன்னர்ஸ்பேர்கில் நடைபெற்று வரும் இப்போட்டியில் தென் ஆபிரிக்க அணி முதலில் களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்காக தென் ஆபிரிக்க வீரர்கள் ரோசர்வ் – ஆம்லா ஜோடி 247 ஓட்டங்களை எடுத்தது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வில்லியர்ஸ் 31 பந்துகளில் அதிவேக சதமடித்தார். இதற்கு முன்னர் 36 பந்தில் நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன் கடந்த வருடம் அடித்த சதமே சாதனையாக இருந்தது.

அதே போன்று கிரிக்கெட் உலகில் 19 வருடங்களாக நிலைத்து நின்ற அதிவேக அரைச் சதம் எனும் சனத் ஜெயசூர்யவின் சாதனையையும் வில்லியர்ஸ் முறியடித்தார். அவர் 16 பந்துகளில் அரைச்சதம் கடந்தார்.

இதே போன்று இப்போட்டியில் தென் ஆபிரிக்க அணி, ஒரு நாள் போட்டி இன்னிங்ஸ் ஒன்றில் பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை எனும் சாதனையையும் படைத்தது. முன்னதாக கடந்த 2006ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தென் ஆபிரிக்க அணி பெற்ற 438 ஓட்டங்கள் எனும் ஓட்ட எண்ணிக்கையே இதுவரை இரண்டாவது அதிகூடிய ஒரு நாள் ஓட்ட எண்ணிக்கையாக இருக்கிறது.

2006ம் ஆண்டு நெதர்லாந்து அணிக்கு எதிராக இலங்கை பெற்ற 443 ஓட்டங்களே இதுவரை அதிகூடிய ஒரு நாள் ஓட்ட எண்ணிக்கையாக சாதனையில் உள்ளது.

இன்றைய போட்டியில் டிவிலியர்ஸ் மொத்தம் 59 பந்துகளில் 16 சிக்ஸர்கள், 9 பவுன்றிகள் உட்பட 149 ஓட்டங்களை எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் தென் ஆபிரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 439 ஓட்டங்களை குவித்திருந்தது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit