ஜனவரி 26 ஆம் திகதி பூமிக்கு மிக அருகே கடந்து செல்லவுள்ள குறுங்கோள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி பூமிக்கு மிக அருகே 2004 BL86 என்ற குறுங்கோள் ஒன்று கடந்து செல்லவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

அன்றைய தினம் குறித்த குறுங்கோளானது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையேயான தூரத்தின் 1/3 பங்கு பூமிக்கு அருகே கடந்து செல்லும் எனவும் இதற்குப் பின் இந்தளவு அண்மையாக 2027 ஆம் ஆண்டே ஏதேனும் குறுங்கோள் பூமிக்கு அருகே வரும் சந்தர்ப்பம் உள்ளது எனவும் நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

1/2 Km விட்டமுடைய ஓரளவு பெரிய குறுங்கோளான 2004 BL86 இனால் அவதானிக்கத் தக்க வருங்காலத்துக்கு பூமிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது எனவும் நாசா கூறுகின்றது. இதற்குப் பின் இந்தளவு பருமன் உடைய விண்கல்லாக 2027 ஆம் ஆண்டு 1999 AN10 என்ற குறுங்கோள் கடந்து செல்லும் எனவும் தெரிவிக்கப் படுகின்றது. மேலும் ஜனவரி 26 அளவில் 2004 BL86 குறுங்கோளானது பூமியில் இருந்து 1.2 மில்லியன் Km தொலைவில் கடந்து செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. கலிபோர்னியாவில் அமைந்துள்ள நாசாவின் JPL என்ற ஆராய்ச்சிக் கூடத்தில் 16 வருட பணிக்குப் பின்னர் ஓய்வு பெறும் பூமி விண்கல் திட்ட முகாமையாளரான டொன் யெயோமான்ஸ் இந்நிகழ்வு பற்றிக் கூறுகையில், ஜனவரி 26 திங்கட்கிழமை பூமிக்கு மிக அருகே வரும் 2004 BL86 குறுங்கோளினது வருகைக்குப் பின்னர் அடுத்த 200 வருடங்களுக்குப் பின்பே இவ்வளவு அருகில் ஏதேனும் குறுங்கோள் புவிக்கு அண்மையில் வர வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பூமிக்கு மிக அண்மையில் 2004 BL86 வரும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு மைக்ரோ அலைகள் மூலமாகவும் ஏனைய தொலைக்காட்டிகள் மூலமாகவும் இதனை ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது. இக்குறுங்கோள் 2004 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் திகதி நியூமெக்ஸிக்கோவிலுள்ள LINEAR என்ற விண் தொலைக் காட்டியால் கண்டு பிடிக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*