வடகொரியாவிலிருந்து தப்பித்த ராணுவ வீரர்! தென்கொரியா ராணுவம் துப்பாக்கி சூடு

பிறப்பு : - இறப்பு :

வடகொரியாவிலிருந்து தென் கொரியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற ராணுவ வீரரால் எல்லைப்பகுதியில் பரபரப்பானது.

இன்று உள்ளூர்நேரப்படி காலை 8 மணியளவில் Oh Chong Song என்னும் வடகொரிய ராணுவ வீரர் எல்லைப்பகுதியை கடக்க முயன்றுள்ளார்.

பலத்த பாதுகாப்புடன் கூடிய எல்லைப்பகுதியை கடக்க முயன்றவர் மீது வடகொரியா எவ்வித தாக்குதலையும் நடத்தவில்லை என தென்கொரியா தெரிவித்துள்ளது.

எனினும் ராணுவ வீரரை நோக்கி ஓடிவந்த வடகொரியா பாதுகாப்பு அதிகாரிகள் மீது தென் கொரியா ராணுவத்தினர் 20 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதற்கிடையே Oh Chong Song-ன் உடலில் இருந்து 10 இன்ச் நீளமுள்ள ஒட்டுண்ணிகள் நீக்கப்பட்டதாகவும், நான்கு குண்டுகள் உடலை துளைத்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைதொடர்ந்து வடகொரியா எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்பாக கடந்த நவம்பர் 13ம் திகதி நபர் ஒருவர் எல்லைப்பகுதியை கடக்க முயன்ற போது 40 முறை துப்பாக்கியால் சுடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit