மகளை கொன்று தண்ணீர் தொட்டியில் சடலத்தை மறைத்து வைத்த தாய்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஹாங்காங்கில் மகளை கொன்று பல துண்டுகளாக வெட்டி சடலத்தை தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்திருந்த தாய் தன் மீதுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார்.

நாட்டின் மோங் காக் மாகாணத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. சாவோ யன் (37) என்ற பெண் இரு முறை திருமணமாகி இரண்டு கணவர்களையும் பிரிந்துள்ளார்.

ஹோ மீ கிட் (12) என்ற தனது மகளுடன் யன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் சிறுமி மீட் கிட் தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்ததோடு, அவரின் உடல் பாகங்கள் துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் தண்ணீர் தொட்டியில் இருந்துள்ளது.

யன் வீட்டுக்கு அக்கம்பக்கத்தினர் வந்த பார்த்த நிலையில் சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றி விட்டு யன்-ஐ கைது செய்தார்கள்.

சிறுமியின் சில உடல் பாகங்கள் கழிவறையில் இருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், யன்-னுக்கு போதை பழக்கம் உள்ளதாகவும் அந்த நிலையில் தான் மகளை கொன்றுள்ளார் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதற்கேற்றார் போல கொலை நடந்த வீட்டிலிருந்து போதை சம்மந்தமான பொருட்கள் மற்றும் ஆணுறைகளை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட யன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து தனக்கு எதுவுமே புரியவில்லை என கூறினார்.

இதையடுத்து அவரிடம் பொலிசார் தீவிர விசாரணை நடத்தவும், வழக்கை அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 28-ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*