ஈரானில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்;

பிறப்பு : - இறப்பு :

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நேற்றிரவு 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில், இந்திய நேரப்படி, நேற்றிரவு இரவு சுமார் 8.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், டெஹ்ரானில் இருந்து 40 கிமீ தொலைவிற்கு மேற்கு திசையிலம், 10 கிமீ ஆழத்திலும் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானதாகவும் கூறப்பட்டது.

மேலும், நிலநடுக்கம் ஏற்பட்டதும், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தினால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முழுமையான தகவல்கள் வெளிவரவில்லை.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit