அபிவிருத்தி காணும் இலங்கையில் இப்படியும் வீதிகள் இருக்கலாமா…..?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கந்தளாய் – பேராறு இரண்டாம் குலனிக்கு உட்பட்ட பிரதான வீதியில் போக்குவரத்துகள் மேற்கொள்ள முடியாத நிலையில், பயணிகள் பெரும் அசௌகரியங்களை மேற்கொண்டு வருவதாக இந்த பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பேராறு முதலாம் குலனியையும், இரண்டாம் குலனியையும் பிரிக்கும் இந்த வீதியானது நீண்ட காலமாக செப்பனிடப்படாததால் குன்றும், குழியுமாக உள்ளதுடன், மழைகாலங்களில் சேரும், சகதியும் நிறைந்ததாக காணப்படுவதாக பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த வீதியை பாடசாலை மாணவர்கள், பொது மக்கள் எனப் பலரும் நாளாந்தம் பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில் இந்த வீதியினை செப்பனிட்டு தருமாறு பிரதேச மக்கள் கந்தளாய் பிரதேச சபையின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் இது வரை எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என பிரதேச மக்கள் கூறியுள்ளனர்.

தற்போது மழை பெய்து வருகின்றமையால் இந்த வீதி வழுக்கும் நிலையிலுள்ளதுடன், அண்மையில் இந்த வீதியின் ஊடாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் விழுந்து தலையில் பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

தென்னிலங்கையில் கடலுக்குள்ளும் கட்டிடம் கட்டும் நிலையில் இவ்வாறான கிராமங்களில் மக்கள் அன்றாடம் பொதுமக்கள் பயன்படுத்தும் வீதிகளோ சேறும் சகதியுமாக, குண்டும் குழியுமாக நீண்டகாலமாக இருப்பது கவலைக்குரியதாகவே இருக்கின்றது எனவும், வாக்குரிமை கேட்டு போகும் அரசியல்வாதிகளே இதனையும் சற்று அவதானியுங்கள் எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

எனவே இது குறித்து உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறு மேலும் எத்தனை கிராமங்களில் மக்கள் அசெளகரியங்களைச் சந்திக்கின்றனரோ யாரறிவர்…..

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*