வளிமண்டலத்தில் குழுப்பநிலை: கடற்தொழிலாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

பிறப்பு : - இறப்பு :

கடந்த சில நாட்களாக வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக இன்றைய தினத்திலும் நாட்டின் பல பாகங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு, சப்ரகமுவ, தெற்கு, ஊவா மாகாணங்களிலும் மற்றும் களுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்களிலும் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் தென் மற்றும் தென்கிழக்கு பகுதிகளின் ஆழமான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக கடற்தொழிலாளர்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit