கனடா வீட்டில் சடலமாக கிடந்த இளம் பெண்: நடந்தது என்ன?

பிறப்பு : - இறப்பு :

கனடாவில் உள்ள வீட்டில் இளம் பெண் சடலாக கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக இளைஞர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நாட்டின் ரிச்மெண்ட் ஹில் நகரில் உள்ள யோர்க் பகுதியிலிருந்து புதன்கிழமை காலை 11 மணியளவில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசாருக்கு போன் வந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு சென்று பொலிசார் பார்த்த போது 28 வயதான இளம் பெண் சடலமாக கிடந்துள்ளார்.

சடலத்தை கைப்பற்றிய பொலிசார் சம்பவம் தொடர்பாக 28 வயது இளைஞரை கைது செய்துள்ளனர்.

பொலிசார் கூறுகையில், கொல்லப்பட்ட பெண்ணும், கைது செய்யப்பட்ட இளைஞரும் ஏற்கனவே ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என நம்புகிறோம்.

கொல்லப்பட்ட பெண்ணின் உடலில் காயங்கள் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் உள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே அவர் இறப்புக்கான காரணத்தை சரியாக சொல்ல முடியும்.

சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இது குறித்த தகவல் யாருக்காவது தெரிந்தால் எங்களை அனுகலாம் என கூறியுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit