எனது மகளை சிறையில் அடையுங்கள்: நீதிபதியிடம் கெஞ்சிய தாய்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

625-0-560-350-160-300-053-800-668-160-90-5

போதை பழக்கத்துக்கு அடிமையாகி திருட்டுகளில் ஈடுபடும் தன்னுடைய 30 வயது மகளை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பாமல் சிறையில் அடைக்க வேண்டும் என தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானியாவைச் சேர்ந்தவர் 54 வயது பெண் Wendy Probert, இவரின் 30 வயது மகள் Kimberley Probert திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், ஹெராயின் எனும் போதைப் பொருளுக்கு அடிமையாகியிருக்கிறார்.

இந்நிலையில் Kimberley, தான் திருடிய கமிரா ஒன்றை ஒன்லைனில் விற்பதற்காக, தனது பேஸ்புக் பக்கத்தில் அதனை பதிவிட்டுள்ளார்.

இதனைக் கண்ட பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். அதன் பின்னர், வழக்கை விசாரித்த நீதிமன்றம், Kimberley போதைப் பழக்கத்திற்கு அடிமையானதாலேயே இவ்வாறு திருட்டுகளில் ஈடுபடுகிறார் என்பதை அறிந்தது.

அதனால், அவருக்கு சிறை தண்டனை அளிக்காமல், அவர் போதை பழக்கத்திலிருந்து விடுபட மறுவாழ்வு மையத்திற்கு செல்ல வேண்டும் என தீர்ப்பளித்தது.

ஆனால் Kimberleyயின் தாய் Wendy, இந்த தீர்ப்பை எதிர்த்து தனது மகளை சிறையில் அடைக்க வேண்டும், அப்போது தான் அவர் போதை பழக்கத்திலிருந்து முழுமையாக விடுபடுவாள் என்று கோரிக்கை வைத்தார்.

பின்னர் இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த நீதிபதி, Kimberley-க்கு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit