பறக்கும் விமானத்தில் பெண் பயணிக்கு நேர்ந்த துயரம்: பாதி வழியில் திரும்பிய விமானம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சீனா தலைநகர் பீஜிங்கில் இருந்து புறப்பட்ட ஏர் சீனா விமானத்தில் பெண் பயணி ஒருவர் திடீரென்று சுய நினைவை இழந்து உயிருக்கு போராடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீஜிங்கில் இருந்து Chengdu பகுதிக்கு ஏர் சீனாவின் CA 4102 என்ற விமானம் புறப்பட்டு சென்றது.

விமானம் ஓடு தளத்தில் இருந்து மேலெழும்பி 20 நிமிடங்கள் கடந்த நிலையில் திடீரென்று 50 வயது மதிக்கத்தக்க பெண் பயணி ஒருவர் சுய நினைவை இழந்து உயிருக்கு போராடியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த விமான ஊழியர்கள் உடனடியாக விமானிக்கு தெரியப்படுத்தவும், உரிய மருத்துவ உதவி கிடைக்கும் பொருட்டு விமானத்தை மீண்டும் பீஜிங் விமான நிலையத்திற்கே திருப்பி விட்டுள்ளார்.

இதனிடையே அவருக்கு விமானத்தில் முதலுதவி அளிக்கவும் குறித்த பெண்மணி கண் திறந்து பார்த்துள்ளதாக சக பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பீஜிங் விமான நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவர்கள் உடனடியாக குறித்த பெண்மணிக்கு மருத்துவ சேவை அளித்துள்ளனர்.

இந்த விவகாரத்தால் குறித்த விமானம் சுமார் 5 மணி நேர தாமதத்திற்கு பின்னர் மீண்டும் புறப்பட்டு சென்றுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*