இதை பின்பற்றுங்கள்: மூட்டு வலிக்கான மருந்து

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கால்களில் மூட்டை சுற்றியும் இருக்கும் தசை நார்கள் தளர்ச்சி அடைந்து, மூட்டைச் சுற்றியிருக்கும் திரவம் நன்றாக சுரக்காமல், மூட்டுகளில் தேய்மானம் ஏற்பட்டால் கடுமையான மூட்டு வலி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

இதனை போக்க இயற்கையில் உள்ள எளிய மருத்துவம் மற்றும் உணவுகள் சாப்பிடுவதை பின்பற்றினாலே போதும்.

தேவையான பொருட்கள்
  • நல்லெண்ணெய் – 1 கப்
  • கல் உப்பு – 1 கப்
தயாரிக்கும் முறை

நல்லெண்ணெயில் கல் உப்பை போட்டு நன்றாக கலந்து அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் இறுக்கமாக மூடி 8 நாட்களுக்கு வெளிச்சம் இல்லாத இடத்தில் வைக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை

கண்ணாடி பாட்டிலில் வைத்த எண்ணெய்யை 8 நாட்களுக்கு பின் எடுத்து, லேசாக சூடு செய்து அதை மூட்டுப் பகுதியில் தேய்த்து மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

நன்மைகள்
  • நல்லெண்ணெய் மூட்டைச் சுற்றியுள்ள தசை மற்றும் இணைப்புகளில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க செய்து மூட்டில் இருக்கும் இறுக்கத்தை குறைத்து, ரத்த ஓட்டத்தை தூண்டி மூட்டு வலி குறைக்க உதவுகிறது.
  • கல் உப்பு, வீக்கங்களை குறைக்கும் தன்மை கொண்டது. எனவே இது சுளுக்கு, தசைப் பிடிப்பு போன்றவற்றிற்கு கல் உப்பு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
  • வாரம் ஒரு நாள் நல்லெண்ணெயால் மசாஜ் செய்து குளித்து வந்தால் எலும்புகள் வலிமை பெற்று, மூட்டுகளின் இணைப்புச் சவ்வுகள் வறட்சி அடையாமல் தடுக்கலாம்.
மூட்டுகளை வலிமையாக்கும் பானங்கள்
  • 1 கப் வேக வைத்த ஓட்ஸ், 1 கப் நீர், 1 கப் அன்னாசி சாறு, 1 கப் ஆரஞ்சு சாறு, 2 ஸ்பூன் தேன் மற்றும் 1 ஸ்பூன் பட்டைப் பொடி ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்து ஒரு நாளைக்கு மூன்று முறைகள் குடிக்க வேண்டும்.
  • 1 லிட்டர் நீரில் குப்பை மேனி இலைகளை பொடியாக நறுக்கி போட்டு 20 நிமிடங்கள் கொதிக்க வைத்து ஆறிய பின் வடிகட்டி அந்த நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும். இதனால் முடக்கு வாதம் வராது.
  • ஆலிவ் ஆயிலை சூடுபடுத்தி அதில் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து ஒரு பஞ்சினால் அதில் நனைத்து தினமும் இரவில் மூட்டுகளில் தடவி வர மூட்டு வலி விரைவில் குறையும்.
மூட்டு வலியை தடுக்க சாப்பிட வேண்டியவை?

சூரிய காந்தி எண்ணெய், கடலெண்ணெய், நல்லென்ணெய் ஆகிய எண்ணெய்களை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பால், மோர், தயிர் என்று பால் தொடர்பான பொருட்கள் மற்றும் கீரை வகைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மூட்டு வலி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை?

சோள எண்ணெய், தக்காளி, சர்க்கரை மற்றும் கோதுமை, பார்லி ஓட்ஸ் போன்ற தானியங்களை மூட்டு வலி உள்ளவர்கள் தவிர்ப்பது மிகவும் நல்லது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*