பேத்தியின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடிய ஜனாதிபதி: கொந்தளித்த மக்கள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டியுடெர்ட் தமது பேத்தியின் பிறந்தநாள் விழாவினை ஜனாதிபதி மாளிகையில் மிக விமரிசையாக கொண்டாடியது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டியுடெர்ட் தமது பேத்தியின் 18-வது பிறந்தநாள் விழாவினை மிக விமரிசையாக கொண்டாடியுள்ளார்.

அதில் Isabelle Lovelie Duterte தமது 10,000 பவுண்ட்ஸ் மதிப்பிலான உடையை அணிந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

தென்கிழக்கு ஆசியாவில் பல நாடுகள் வறுமையில் தத்தளிக்கும் நிலையில் பேத்தியின் பிறந்த நாள் விழாவினை இத்தனை விமரிசையாக அதுவும் ஜனாதிபதி மாளிகையில் கொண்டாடுவது ஏற்புடையதா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனால் இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி ரோட்ரிகோ டியுடெர்ட், இது தேவையற்ற பரபரப்பு. Isabelle Lovelie எனது குடும்பத்தில் ஒருவர், அவரது பிறந்த நாள் விழாவினை ஜனாதிபதி மாளிகையில் கொண்டாடுவதில் என்ன தவறு எனவும் பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே ஜனாதிபதி ரோட்ரிகோவின் செயலை முன்னாள் பிலிப்பைன்ஸ் சர்வாதிகாரி பெர்டினாண்ட் மார்கோசின் வாழ்க்கையுடன் ஒப்புட்டுள்ளனர்.

மார்கோசின் ஆட்சி காலத்தில் அவரது மனைவி இமெல்டா 1000 ஜோடி காலணிகளை சேகரித்து வைத்திருந்த சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*