கர்ப்பினி பெண்ணை காப்பாற்ற பல மைல் தூரம் பயணித்த இளைஞர்: குவியும் பாராட்டு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சென்னையில் கர்ப்பினி பெண்ணுக்கு அரிய வகை இரத்த தானம் செய்வதற்காக பெங்களூருவில் இருந்து வந்திருந்த இளைஞரை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்திற்காக சென்னை எழும்பூர் மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டாவது பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட அப்பெண்ணின் முதல் பிரசவமும் அந்த மருத்துவமனியில் நடந்துள்ளது.

சி-செக்ஷன் எனப்படும் சிசேரியன் முறைப்படி முதல் பிரசவம் நடைபெற்ற போது அந்த பெண்ணுக்கு அரிய வகை இரத்தப்பிரிவு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

பாம்பே நெகட்டிவ் குருப் அல்லது RH-ve என பொதுவாக அறியப்படும் அந்த இரத்த வகை மிகவும் அரிதான வகை என்பதால் அறுவை சிகிச்சையின் போது இரத்தம் தேவைப்படும் என கருதி உள்ளனர்.

இந்தியா முழுவதிலும் உள்ள இரத்த வங்கிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் பெங்களூருவில் பத்திரிக்கையாளராக பணியாற்றி வரும் 21-வயது ஸ்ரீஜித் நாராயணன் என்பவருக்கு அந்த வகை இரத்தம் உள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மருத்துவமனையின் சார்பாக அவரை தொடர்பு கொண்டு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தவுடன் இரயில் மூலம் சென்னை வந்த அந்த நபர் கர்ப்பினி பெண்ணுக்கு இரத்த தானம் செய்தபின் மீண்டும் பெங்களூரு திரும்பியுள்ளார்.

இந்த நற்செயலை பாராட்டும் வகையில் அந்த இளைஞருக்கு பலரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

குறித்த பெண்ணிடம் முன்னரே அறிவுறித்தியதாகவும், இறுதி நிலையில் அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தான் இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் எனவும் மருத்துவர் சாந்தி குணசிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*