அரசாங்கத்தை உருவாக்கிவிட்டு வேடிக்கை பார்க்க முடியாது: மனோ

பிறப்பு : - இறப்பு :

அரசாங்கத்தை உருவாக்கிவிட்டு வெளியில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மகாவலி கேந்திர மையத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த அரசாங்கம் நாங்கள் உருவாக்கிய அரசாங்கம். ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் நாமே உருவாக்கினோம்.

அரசாங்கத்தினை உருவாக்கிவிட்டு வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மக்களுக்குச் செய்யும் துரோகமாகும். எனவே இந்த அரசாங்கத்திற்குள் நாம் பலமாக இருக்கவேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் இடங்களில் நாம் ஐக்கிய தேசிய முன்னணி எனும் பெயரில் யானைச் சின்னத்திலும், ஏனைய இடங்களில் ஒருங்கிணைந்த முற்போக்குக் கூட்டணி எனும் பெயரில் ஏணிச் சின்னத்திலும் போட்டியிடவுள்ளோம்” என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit