லேசாக உரசிய கார்: ஆத்திரத்தில் வயதான ஓட்டுனரை அடித்த இளம் பெண்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

625-500-560-350-160-300-053-800-748-160-70-11

பிலிப்பைன்ஸில் மூத்த டாக்ஸி ஓட்டுநரை பெண் ஒருவர் சாலையில் தாக்கிய வீடியோ வைரலாகியுள்ளது.

நாட்டின் க்யூஸன் நகரை சேர்ந்த வெர்ஜிலோ (52) என்ற மூத்த டாக்ஸி ஓட்டுனர் காரை ஓரம் கட்டியபோது ஷர்மைன் என்ற பெண்ணின் காரில் லேசாக மோதியுள்ளது.

அதனால் ஆத்திரமடைந்த ஷர்மைன், காரைவிட்டு இறங்கி டாக்ஸி ஓட்டுநரைத் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

பின்னர் வெர்ஜிலோ காரின் கண்ணாடியை உடைத்து அவரை தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த வெர்ஜிலோ, சாலையோரத்தில் கண்கலங்கியபடி வந்து அமர்ந்துகொண்டார்.

இந்நிலையில் ஷர்மைன் மீது வெர்ஜிலோ காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணையில் ஷர்மைன் பெரிய தொழிலதிபர் எனவும் தெரியவந்துள்ளது.

இதனிடையே, தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு ஷர்மைன் பேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார்.

அதில் நான் வேண்டுமென்று எதையும் செய்யவில்லை, நான் யார் என்பது என் குடும்பத்தினருக்குத் தெரியும் என பதிவிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit