வெடிகுண்டு மிரட்டல்: 1,00,000 பிராங்க் திருடிய பெண்ணின் பலே திட்டம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

frang

சுவிட்சர்லாந்தில் தான் பணிபுரியும் கடைக்கு, பொய்யான வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பெண்ணொருவர் 1,00,000 பிராங்குகளை திருடியுள்ளார்.

சுவிஸின் Pratteln பகுதியில் உள்ள கடை ஒன்றிற்கு, கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அந்த கடைக்கு விரைந்த பொலிசார் அங்கு இருந்த நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களை வெளியேற்றினர்.

பின்னர், அவர்கள் நடத்திய தீவிர சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்காததால், பொய்யான தகவல் எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் சோதனை நடத்தப்பட்ட அந்த கடையின் பணப்பெட்டியில் இருந்த 1,00,000 பிராங்கு பணம், காணாமல் போனது தெரியவந்தது.

அக்கடையில் பணிபுரிந்த 37 வயது பெண்ணே குற்றவாளி என்பதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக நடந்த வழக்கில் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜரான் பெண், வெடிகுண்டு மிரட்டலை விடுத்த பின்னர், அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பணத்தினை கொள்ளையடித்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

சூதாட்டத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பெண், அதனால் ஏற்பட்ட கடனை சரி செய்யவே கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அப்பெண்ணிற்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், சூதாட்ட போதைக்கு மனரீதியான சிகிச்சையையும் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit