இடுப்பில் கையை வைத்தபடி நின்றுகொண்டிருந்த ஒசாமா: உடலை துளைத்த 3 குண்டுகள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

2011 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிறப்பு படை, அல்கொய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் மறைந்திருந்த போது சுட்டுக்கொலை செய்தது.

ஒசாமாவின் மரணத்திற்கு பின்னர், அவரது அறையில் இருந்த கடிதங்கள், அவரின் திட்டங்கள் மற்றும் சில ரகசிய கோப்புகளை தாங்கள் கைப்பற்றியதாக சிறப்பு படை அதிகாரிகள் தெரிவித்து வந்தனர்.

ஒசாமா மரணம் குறித்து ஒவ்வொரு முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது அவரை நான் தான் சுட்டுக்கொன்றேன் என அமெரிக்க கடற்படையின் முக்கியமான சிறப்பு நடவடிக்கைகள் படை அதிகாரி ராபர்ட் ஓ நீல் எழுதியுள்ள புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

பின்லேடன் மீதான அதிரடித் தாக்குதலில் ஈடுபட்ட 400 பேர் கொண்ட அமெரிக்க கடற்படையின் முக்கியமான சிறப்பு நடவடிக்கைகள் படை கமாண்டோக்களில் ராபர்டும் ஒருவர்.

அவர் எழுதியுள்ள ‘த ஆபரேட்டர்’ புத்தகத்தில் ஒசாமா குறிவைக்கப்பட்டது தொடர்பான பல முக்கிய நிகழ்வுகளைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

நாங்கள் ஒசாமா பின்லேடன் இருக்கும் இடத்தை அடைந்தததும், அவர் மறைந்திருந்த இடத்தின் இரண்டாவது மாடியில் இருப்பதாக ஒரு பெண் எங்களிடம் தெரிவித்தார்.

பின்லேடனை பாதுகாக்க அவரது மகனும் கூடவே இருந்தார். என்னுடன் இருந்த பல கமாண்டோக்கள் இடப்புறமும், வலப்புறமும் பாதையை ஏற்படுத்திக் கொண்டே சென்றார்கள். எனக்கு முன் ஒரு காமாண்டோ சென்றார், அங்கு சிலர் இருந்தனர்.

முன்புறம் இருந்த திரையை அகற்றியதும், இடுப்பில் கைவைத்தபடி ஒசாமா பின்லேடன் நின்றுக்கொண்டிருந்தார்.

பின்லேடன் மீது மூன்று முறை சுட்டேன், அவர் நின்று கொண்டிருந்தபோது இரண்டு முறையும், கீழே விழுந்ததும் மூன்றாவது முறையாகவும் சுட்டேன்.

முன்புறத்தில் அவரது மனைவியும், எனக்கு இடப்புறத்தில் பின்லேடனின் மகனும் நின்றார்கள். இருவரையும் படுக்கையில் தள்ளிவிட்டேன்.

அதற்குள் இதர கமாண்டோக்களும் அங்கு வந்துவிட்டார்கள். இப்போது என்ன செய்யட்டும் என்று மகனிடம் கேட்டபோது அவன் சிரிக்கத் தொடங்கிவிட்டான்.

பிறகு நாங்கள் அனைவரும் அந்த அறையிலும், பிற இடங்களிலும் தேடுதலைத் தொடங்கினோம். அங்கிருந்த ‘ஹார்ட் டிரைவ்’ மற்றும் இதர எலக்ட்ரானிக் பொருட்களை சேகரித்தோம் என கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*