முதியோர் இல்லத்தில் வேலை செய்யும் கோடீஸ்வர பெண்மணி: காரணம் என்ன?

பிறப்பு : - இறப்பு :

லாட்டரியில் விழுந்த பரிசால் ஒரே நாளில் கோடீஸ்வரியாக மாறியுள்ள பெண் தொடர்ந்து தனது முதியோர் இல்ல உதவியாளர் பணியை செய்யவுள்ளார்.

பிரித்தானியாவின் பக்கிங்காம்ஷயர் கவுண்டியில் உள்ள வெக்ஸ்ஹாம் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் (57), இவர் மனைவி பேட்ரிசியா (55).

ராபர்ட் தனியார் பள்ளியில் மேலாளராக பணிபுரியும் நிலையில், பேட்ரிசியா முதியோர் இல்லத்தில் உதவியாளராக பணிபுரிகிறார்.

இந்நிலையில், பேட்ரிசியா வாங்கிய லாட்டரி சீட்டில் கடந்த 9-ஆம் திகதி அவருக்கு 1 மில்லியன் பவுண்ட் பரிசு விழுந்துள்ளது.

சாதாரண நிலையில் இருந்த பேட்ரிசியா இதன் மூலம் ஒரே நாளில் கோடீஸ்வரியாகி உள்ளார்.

இவ்வளவு பெரிய பணம் தனக்கு வந்தும் தனது பணியை தொடர்ந்து செய்ய அவர் முடிவெடுத்துள்ளார், மேலும், கிறிஸ்துமஸ் தினத்தன்று அதிக நேரமாக 12 மணிநேரம் பணி செய்யவுள்ளார்.

பேட்ரிசியா கூறுகையில், பணம் அதிகம் உள்ளதால் நான் வேலையை விட்டு விடுவேன் என பலர் கூறினார்கள், ஆனால் நான் செய்யும் பணி எனக்கு மிகவும் பிடித்துள்ளது என கூறியுள்ளார்.

ராபர்ட் கூறுகையில், நானும் எனது வேலையை விட மாட்டேன், நாங்கள் இப்போது போலவே எப்போதும் இருப்போம்.

இந்த பணம் எங்கள் பாதுகாப்புக்கு உதவும் என நம்புகிறோம், இதன் மூலம் பிள்ளைகளுக்கு புதிய வீடு வாங்குவது போன்ற விடயங்களை மேற்கொள்வோம் என கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit