மாகாணசபை எல்லை மீள்நிர்ணய அறிக்கை ஜனவரி மாத இறுதியில்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மாகாணசபை தேர்தல் தொகுதி எல்லை மீள்நிர்ணய அறிக்கை 2018ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என அதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் கே.தவலிங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தமது குழு 25 மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொண்டு ஆய்வுகளை நடத்தி வருவதாகவும், இதனடிப்படையில் தமது குழுவிற்கு இதுவரையில் 500 இற்கும் அதிகமான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த ஆய்வுகள் மற்றும் யோசனைகளின் அடிப்படையில் தயாரிக்கப்படும் இறுதி அறிக்கை, உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சரிடம் ஜனவரி மாத இறுதிக்குள் கையளிக்கப்படும் என்றும் ஆங்கில ஊடகமொன்றிடம் அவர் கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*