சூர்யாவுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிப்பது உண்மையா ?

பிறப்பு : - இறப்பு :

சூர்யா நடிப்பில் நானும் ரவுடி தான் படத்தை எடுத்த விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பொங்கல் வெளியீடாக வருகிறது தானா சேர்ந்த கூட்டம். இப்படத்தை அடுத்து சூர்யா செல்வராகவன், சுதா, கே வி ஆனந்த் போன்ற முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் செல்வராகவன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை சாய்பல்லவி நடிக்கவுள்ளார் என்ற செய்து பரவி வருகிறது. இது பற்றி விசாரிக்கையில் இன்னும் பேச்சுவார்த்தை நிலையில் தான் உள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தான் டூயட் பாடி ஆடவிருப்பதாக நடிகை ரகுல் ப்ரீத் சிங்கே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். தற்போது, சாய் பல்லவி குறித்த செய்தி பரவி வருவதால் டபுள் ஹீரோயின்ஸாக இருக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit